PM Modi wishes for thiruvalluvar day in his twitter page

Advertisment

திருவள்ளுவர் தினத்திற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும்’என தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.