Skip to main content

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்; “சாவதே மேல் என அடிக்கடி கூறுவாள்” - கைதானவரின் தாய்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Detainee's mother says She often says lost her lives is better about Trespass in Parliament; “

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. இந்த பெண்களை போலீசார் கைது செய்யும்போது நீலம் என்ற பெண் செய்தியாளர்களைச் சந்தித்து, “என்னுடைய பெயர் நீலம். மத்திய அரசு எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். காவல்துறை தடியடியையும் நிறுத்த வேண்டும். எங்களை துன்புறுத்துகிறார்கள், சிறையில் அடைக்கிறார்கள். இதை அவர்கள் நிறுத்த வேண்டும். 

நான் எந்த அமைப்பையும் சார்ந்தவர் இல்லை. நான் இந்திய மாணவர். எங்களையும், சிறு வியாபாரிகளையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் நசுக்குகிறார்கள். இதை எதிர்த்துதான் நாங்கள் இதை செய்கிறோம். எங்கள் குரலை யாரும் கேட்பதில்லை. அடக்குமுறையையும், வன்முறையையும் நிறுத்துங்கள்” என்று கூறியவர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து, நீலம் என்பவரின் தாய் ஹரியானாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நீலம் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி மிகவும் கவலைப்பட்டார். நான் அவருடன் எப்போதும் பேசுவேன். ஆனால், அவர் டெல்லி விஷயத்தைப் பற்றி ஒருமுறை கூட சொல்லவில்லை. அவளுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைக்காததால் சாவதே மேல் என்று அவ்வப்போது என்னிடம் கூறுவாள்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பரபரப்பான சூழலில் ஜூன் 24 ஆம் தேதி கூடுகிறது மக்களவை!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
 lok sabha session to meet on june 24

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பாஜக அமைத்துள்ளது. அதன்பிறகு நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவர்களுடன் ஏற்கனவே இருந்து அமைச்சரவையில் சில மாற்றங்களுடன் கேபினெட் அமைச்சர்களும் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும் மொத்தம் 72 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கூடிய மக்களவை கூடுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கரன் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற மக்களவை கூட்டம் வரும் 24 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பில், ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதி இடைக்கால சபாநாயகர் மூலம் வெற்றிபெற்ற எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து செய்து வைக்கப்படும். 26 ஆம் தேதி சபாயாநகர் தேர்வு நடைபெறும். பின்னர் 27 ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவை மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூட்டுத்தொடரில் உரையாற்றுவார். அதன்பிறகு மக்களவை, மாநிலங்களைவை என இரு அவைகளிலும் தனித்தனியே அமர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராகக் கனிமொழி எம்.பி. நியமனம்!

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Kanimozhi MP Appointment as DMK Parliamentary Committee Leader

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

இதனையடுத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 8 ஆம் தேதி (08-06-2024) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

Kanimozhi MP Appointment as DMK Parliamentary Committee Leader

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுகவின நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியும், மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களைவை கொறடாவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், திமுக மாநிலங்களவைக்குழுத் தலைவராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.யும், மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி.யும், மாநிலங்களவை கொறடாவாக  திமுக தலைமைக் சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி.யும், இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி.யும் நியமிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.