Skip to main content

'தனது தகுதியான மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டது'- பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

 'The nation has lost one of its deserving sons' - Leaders mourn Pranab Mukherjee

 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில நாட்களாகவே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் தினமும் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 13 -ஆவது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலைையில் அவர் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில். தனது தகுதியான மகன்களில் ஒருவரை தேசம் இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத முத்திரை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தவர் பிரணாப் முகர்ஜி என உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார். பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை நாடு முழுவதற்கும் பெருமை சேர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர் எனக் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும், பிரணாப் முகர்ஜியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலாச்சாரம் பண்பாட்டை முன் நிறுத்தியவர் பிரணாப் முகர்ஜி என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

 

Ad

 


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சிறப்பான முறையில் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் பிரணாப் முகர்ஜி எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்