நேபாளம் சிமிகோட் பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் யாத்திரை சென்ற 23 தமிழர்கள் உட்பட 1200 க்கு மேற்பட்டோர் சிக்கி தவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில் மழை பொழிவு இல்லாத நேரத்தில் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற யாத்ரீகர்கள் இந்த பேரிடரில் சிக்கி அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் தங்களை ராணுவம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேபாளத்தில் மட்டும் சிமிக்கோட் பகுதியில் 525 பேரும். ஹில்ஸா பகுதியில் 550 பேரும் மேலும் திபத்தை ஒட்டிய பகுதியில் 500க்கு மேற்பட்டோரும் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களில் 23 பேர் தமிழர்கள். இந்நிலையில் இந்த இடரில் சிக்கி தவிக்கும் அனைவரையும் மீட்க்கும் பணியில் ராணுவம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.