Skip to main content

இதற்காக தான் கெஜ்ரிவாலை அடித்தாரா இளைஞர்?

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

டெல்லியில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக திறந்த ஜீப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை இளைஞர் ஒருவர் கன்னத்தில் திடீரென அறைந்தார்.  இந்தச் சம்பவம் அணைத்து கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

delhi



தாக்குதலில் ஈடுபட்டவர் டெல்லியை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அன்று எதற்காக, எப்படி நான் அதை செய்தேன் என்று தெரியவில்லை, காவலில் இருந்த போது இந்த செயலுக்காக வருத்தபடுகிறேன், நான் எந்த கட்சியிலும் இல்லை, யாரும் என்னை கெஜ்ரிவாலை அடிக்குமாறு தூண்டவில்லை, காவல்துறையினர் என்னிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.டெல்லி அரசின் செயல்பாட்டினால் அதிருப்தி அடைந்து சுரேஷ் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு முன்பு பலமுறை தாக்கப்பட்டுள்ளார், கடந்த 2015ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஒருவர் அவரை தாக்கினார். அதே ஆண்டில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் அவரை கன்னத்தில் அறைந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் ஒருவர் தலைமை செயலகத்தில் வைத்து கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசியிருந்தார்.இந்த மாதிரி ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் கெஜ்ரிவால் தாக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.
 

சார்ந்த செய்திகள்