Skip to main content

மிசோரம் ஆளுநராகும் கேரள பாஜக தலைவர்...

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

மிசோரம் மாநில கவா்னராக கேரள பாஜக தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை நியாமிக்கப்பட்டுள்ளார்.
 

sreedhar pillai

 

 

சமீபத்தில் தெலுங்கானா கவா்னராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமிக்கப்பட்டார். மேலும் பல மாநில தலைவா்கள் கவா்னராக நியாமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பாஜக வில் நிலவியது. அந்த வகையில் நேற்று இரவு மிசோரம் கவா்னராக கேரள பாஜக தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கேரள பாஜக தலைவராக இருந்த கும்மணம் ராஜசேகரன் மிசோரம் கவா்னராக நியமிக்கப்பட்டு ஆறு மாதத்திலே கவா்னா் பதவியை ராஜினமா செய்ய வைத்து, பாராளுமன்ற தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக தலைமை நிறுத்தியது. அதில் கும்மணம் ராஜசேகா் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவா் கவா்னராக நியமிக்கப்படலாம் என்று கேரள பாஜகவினா் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த வாய்ப்பு ஸ்ரீதரன் பிள்ளைக்கு சென்றது. உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞரான ஸ்ரீதரன் பிள்ளை ஏற்கனவே எம்பி மற்றும் எம்எல்ஏ தோ்தலில் செங்கனூா் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு கணிசமான வாக்குகள் வாங்கியும் மூன்று முறையும் தோல்வி கண்டவா்.

மேலும், வாஜ்பாய் அரசின்போது மத்திய அரசின் வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டியிருந்தார். கேரளா என்எஸ்எஸ் (நாயா் சா்வீஸ் சொசைட்டி) யின் முக்கிய தலைவராகவும் உள்ளார். கவா்னராக நியாமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதரன் பிள்ளைக்கு கேரளா முதல்வா் பினராய் விஜயன், எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதல், முன்னாள் முதல்வா்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி, அமைச்சா்கள் மற்றும் பாஜக தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மிசோரம் மாநில கவா்னராக ஏற்கனவே வா்க்கம் புருஷோத்தமன், கும்மணம் ராஜசேகரன் அடுத்து மூன்றாவதாக ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்