man who threatened his Instagram girl friend

குஜராத் மாநிலம் பதன் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் தஸ்ரத் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே இஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் வர்கா மார்கெட் பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இருவரும் தொலைப்பேசி எண்களைப் பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், அந்த பெண் பிரகாஷ் தஸ்ரத்துடன் பேசுவதை திடீரென நிறுத்தியுள்ளார். போனில் பிரகாஷ் தஸ்ரத் தொடர்பு கொண்டும் அழைப்பை அந்த பெண் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தஸ்ரத் இளம்பெண் வேலைப் பார்க்கும் அழகு நிலையத்திற்கே சென்றுள்ளார். அங்கு அவரிடம் தன்னிடம் பேசாதது குறித்து பிரகாஷ் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

Advertisment

ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து பிரகாஷ் தஸ்ரத் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அழகு நிலையத்தின் உரிமையாளருக்கு ரகசியத் தகவல் கொடுத்துள்ளார். அவரும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணை பிரகாஷ் தஸ்ரத்திடம் இருந்து மீட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.