Skip to main content

ஜார்கண்ட்டில் தாமரைக்கு வாய்ப்பில்லை... கையை பிசையும் அமித்ஷா அண்ட் கோ!

Published on 20/12/2019 | Edited on 21/12/2019

பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதுவரை நான்கு கட்டங்களாக 65 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்தது. 16 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு காலை 7 மணியில் இருந்து நடைபெற்று வந்ததது. குறிப்பிட்ட  5 தொகுதிகளில் வாக்குப்பதிவு மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.



இந்நிலையில் தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 இடங்களை பெறும் என்று கூறப்படுள்ளது. பாஜக 22 முதல் 34 தொகுதிகள் வரை பெற வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்பில் கூறப்படுள்ளது. ஹேமந்த் சோரன் முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்