Skip to main content

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திராணி முகர்ஜி...

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிதம்பரம் ஆகஸ்ட் 21 அன்று சி.பி.ஐ.யால்  கைது செய்யப்பட்டார். தற்போது ஆகஸ்ட் 30 வரை சிபிஐ காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

indrani mukherji about chidambaram arrest

 

 

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முக்கியமான காரணமான இந்திராணி முகர்ஜி இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஷீனா போரா கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்திதான். இப்போது அனைத்து தரப்பிலும் சிதம்பரம் குறிவைக்கப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்