Skip to main content

நாட்டின் பொருளாதார வளர்ச்சி - 7.3%: நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவு மோசமான சரிவு!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

indian economy

 

2020 - 2021 ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, -7.3 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கான வீழ்ச்சியாகும். 2020 - 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.38 சதவீதம்வரை குறைந்துள்ளது. இதற்கு கரோனா ஊரடங்கே காரணம் என கூறப்படுகிறது.

 

அதேநேரத்தில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீத அளவு அதிகரித்துள்ளது. இந்தக் கடைசி காலண்டில் ஊரடங்குகள் நீக்கப்பட்டு, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது, நாட்டின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்