Skip to main content

பிரபாகரன் கொல்லப்பட்டபோது நான் மகிழ்ச்சி அடையவில்லை;மனம் திறந்த ராகுல் காந்தி!!

Published on 23/08/2018 | Edited on 23/08/2018

 

​    ​

 

 

 

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்தபொழுது நான் மிகவும் வேதனையுற்றேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் உள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அத்தனை கேள்விகளுக்கும் மனம் திறந்து பதிலளித்தார் ராகுல். குறிப்பாக தீவிரவாதம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் பதிலளித்து பேசுகையில்,  

 

என் தந்தையை கொன்றவர் இறந்தபோது நான் மகிழ்ச்சி அடையவில்லை மாறாக மிகவும் வேதனை அடைந்தேன் எனக்கூறினார். அதேபோல் இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல், வேலைவாய்ப்பின்மை, தலித்துகள் மீதான பாஜகவின் பாரபட்ச போக்கு போன்றவற்றை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டினர்.

சார்ந்த செய்திகள்