Skip to main content

வார இறுதியில் ஊரடங்கு- பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
gujarat court

 

 

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா அதிகரித்து வரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி, பிரதமர் மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.

 

குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 160 பேருக்கு கரோனா உறுதியாகிவுள்ளது. மேலும் கரோனா பாதிக்கப்பட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் குஜராத்தில் ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, குஜராத்தில் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளுக்கான தேவை இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும், அல்லது வார இறுதிநாட்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என தெரிவித்துள்ள குஜராத் உயர்நீதிமன்றம் இதுகுறித்து முடிவெடுக்குமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்