Published on 01/04/2021 | Edited on 01/04/2021
இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்.15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, அந்தமான், ஒரிசா, ஆந்திர, மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் நீடிக்கும். அதேபோல் மேற்குக் கடற்கரையில் ஜூன் 1 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலாகுவதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி குமரி, கேரளா, கர்நாடகா, டையூ, டாமன், மகாராஷ்டிரா, குஜராத்தில் ஜூன் 1 முதல் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.