இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெரு நகரங்கள் அனைத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சென்னையில் இரண்டு வழத்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் சில வழித்தடங்களில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மெட்ரோ பயன்பாட்டினால் போக்குவரத்து நெரிசல் ஒரளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் கூறப்படுகின்றது. தற்போது, இந்த ரயில்கள் அனைத்தும் சுரங்கப்பாதை வழியாகவும், தூண்களின் வழியாகவும் செல்கின்றது.
தற்போது முதல்முறையாக நீருக்கு அடியில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் பாதை மேற்குவங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 9000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு நிறைவடையும் என்று சொல்லப்படுகின்றது. இதற்காக ஹீப்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டருக்கு சுரங்கம் அமைக்கப்பட இருக்கின்றது. இந்த பாதை அமைக்கப்பட்டால் ஒருசில வினாடிகளில் ஹீப்ளி ஆற்றை கடக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. படகு மூலம் இந்த ஆற்றை கடக்க தற்போது 20 நிமிடங்கள் ஆகின்றது.