The Supreme Court barrage of questions to the west Bengal government

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆசிரியர் பணியிட தேர்வின் மூலம் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கை நீதிமன்றம், 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப் சி, குரூப் டி ஊழியர்கள் என 25,753 நியமனங்களைக் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொல்கத்த உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி மேற்கண்ட 24,000 பேரிடமும் அவர்கள் வாங்கிய சம்பளத் தொகையைத் திருப்பியளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Advertisment

இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (07-05-24) விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் கிருஷ்ணன் கவுல் மற்றும் ஜெய்தீப் குப்தா ஆகியோர் கூறுகையில், ‘25 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்கள் சட்ட விரோதமாக நடந்தது என சி.பி.ஐ., கூட வழக்குப்பதிவு செய்யவில்லை. பணி நியமனங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே மேற்கு வங்க உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டனர்.

வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பராமரிக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இப்போது, ​​தரவு இல்லை என்பது தெளிவாகிறது. உங்கள் சேவை வழங்குநர் வேறொரு நிறுவனத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியாது. நீங்கள் மேற்பார்வை கட்டுப்பாட்டைப் பராமரிக்க வேண்டும்.

Advertisment

அரசு வேலை மிகவும் அரிதானது. பொதுமக்களின் நம்பிக்கை போனால் எதுவும் மிச்சமில்லை. இது முறையான மோசடி. அரசு வேலைகள் இன்று மிகவும் அரிதானவை மற்றும் சமூக இயக்கத்திற்காக பார்க்கப்படுகின்றன. அவர்களின் நியமனங்களும் தவறாக இருந்தால் அமைப்பில் என்ன மிச்சம்? மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இதை எப்படி எதிர்கொள்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.