Skip to main content

தேர்தல் முடிவு எதிரொலி; ஆலோசனைக்குத் தயாராகும் பாஜக, காங்கிரஸ்

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
nnn

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 298 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 228 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணியும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அதிகப்படியான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கேரள மாநிலத்தில் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றிபெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் கடும் போட்டி நீடித்து வந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணி பாஜக கூட்டணிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாஜக கூட்டணி சார்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 7 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

சார்ந்த செய்திகள்