Skip to main content

மோடி முன்னிலையில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
 Devendra Fadnavis sworn in before Modi

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனாலும், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியால் 10 நாட்களாக கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் வந்த நிலையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணியில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. கூட்டணியில் உள்ள பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதால் பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், மகாராஷ்டிராவின் மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார்.

பிரதமர் மோடி  முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக  பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்று கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்