Published on 26/02/2023 | Edited on 28/02/2023

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். இன்று முற்பகலில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் 8 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.