முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், டெல்லியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம்போத் கோட் வரை இறுதி பேரணி நடைபெற்ற நிலையில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தற்பொழுது இறுதி நிகழ்வாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டரும், அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் ஆகியோரும் இறுதி இறுதி அஞ்சலி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதைப்படி யமுனை நதிக்கரை அருகே அவரது உடல் தகனம் செய்ய ஏற்பாடுகளை முப்படையினர் மேற்கொண்டனர். அதன்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் அவரது குடும்ப முறைப்படி தகனம் செய்யப்பட்டது.