Skip to main content

பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை விலைக்கு வாங்கும் ஐஎஸ்ஐ- புது கள்ள நோட்டுகளின் உருவாக்கத்திற்கா!!??

Published on 08/06/2018 | Edited on 08/06/2018

புதிதாக கள்ளநோட்டுகளை அச்சிடப்பதற்காக பழைய மதிப்பிழந்த இந்திய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வாங்குவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

 

isi

 

 

 

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கம் செய்யப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது மதிப்பிழந்த நோட்டுகளை வங்கியில் தராதவர்களிடம் இருந்து சேகரித்து கட்டு கட்டாக பழைய மதிப்பிழந்த நோட்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மதிப்பிழந்த நோட்டுகளை கடத்துபவர்களை பிடிக்கும் போது விசாரணையில் இவைகள் எல்லாம் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ அமைப்பு  வாங்குகிறது என்கின்றனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தாவூத் இப்ராஹிமின் ஆட்களுக்கு கொண்டு சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

 

 

பழைய நோட்டுகளில் இருந்து கோடு போன்ற சரிகையை எடுத்து புதிதாக அச்சடிக்கப்படும் நோட்டுகளில் சேர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். தேசிய புலனாய்வு துறையான என்ஐஏ இதைப்பற்றி விசாரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.   

சார்ந்த செய்திகள்