Skip to main content

பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கரோனா!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

jkk

 

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரையில் 17 கோடி பேருக்கு இந்த நிறுவனங்களின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்