Skip to main content

மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிகளில் கலவரம்... (வீடியோ)

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

மக்களவைக்கான நான்காம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

clash between political parties in west bengal

 

 

இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் 125-129 வரை உள்ள பூத்களில் திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த காவலர்கள் தடியடி நடத்தினர். இதனையடுத்தி நடந்த கலவரத்தில் சில போலீசாரும் தாக்கப்பட்டனர். மேலும் வெளியே நின்று கொண்டிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

''சிங்கங்களின் பெயரை மாற்றுங்கள்...'' - வினோத வழக்கில் தீர்ப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
 "Change the name of the lions...." -Judgment in a strange case

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் உள்ள ஆண் சிங்கத்திற்கும் பெண் சிங்கத்திற்கும் பெயர் மாற்ற வேண்டும் என்ற விஷ்வ இந்து அமைப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் சிலிபுரியில் உள்ள பெங்கால் சபாரி உயிரியில் பூங்காவில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 7 வயது ஆண் சிங்கம் ஒன்று பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் அக்பர். அதேபோல அங்கு இருக்கும் 6 வயது பெண் சிங்கத்தின் பெயர் சீதா. ஒரே இடத்தில் அக்பர், சீதா என பெயர் கொண்ட ஆண் பெண் சிங்கங்கள் இருப்பதற்கு விஷ்வ இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. வினோதமான முறையில் இதற்கு வழங்கும் தொடுக்கப்பட்டது. இராமாயண கதாபாத்திரமான சீதா இந்து மத வழக்கங்களில் கொண்டாடப்படுபவர். அதனால் அக்பர் என்ற பெயருடைய சிங்கத்துடன் சீதா என்ற பெயர் கொண்ட சிங்கத்தை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். எனவே சிங்கங்களின் பெயரை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஷ்வ இந்து அமைப்பு.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற முதல் விசாரணையில், அன்பின் அடிப்படையில் சிங்கங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம், இதில் என்ன பிரச்சனை என நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு விஷ்வ இந்து அமைப்பு, இன்று சிங்கத்திற்கு பெயர் வைத்தது போல நாளை வேறு விலங்குகளுக்கு பெயர் வைக்கலாம். எனவே இதை தடுக்க வேண்டும். இது எங்களுடைய மனதை புண்படுத்தும் என பதில் அளிக்கப்பட்டது.

துர்கா பூஜையில் சிங்கம் இடம் பெற்றுள்ளது. பல இந்து கடவுள்களின் வாகனங்களாக சிங்கங்கள் உள்ளது. சிங்கங்கள் கடவுளாகவும் போற்றப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். கடவுள்களின் வாகனங்கள் தான் சிங்கங்கள். ஆனால் அவைகளை வணங்குவதற்காக தனியாக மந்திரங்கள் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் வைக்கப்பட்டது.

இந்த மனுவை பொதுநலமனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட சிங்கங்களுக்கு பெயர் வைத்தது மேற்கு வங்க அரசோ அல்லது பூங்கா நிர்வாகமோ அல்ல, சிங்கங்களை ஏற்கனவே வைத்திருந்த திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் என மேற்குவங்க அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தது. இந்த வழக்கில் நீதிபதி சவுகத் பட்டாச்சார்யா பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ''நேற்று இரவு நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். கடவுள், சுதந்திர போராளிகள், தலைவர்களின் பெயர்களை ஒரு விலங்குக்கு வைக்கலாமா? ஒரு சிங்கத்திற்கு விவேகானந்தர் என்றோ, ராமகிருஷ்ண பரமஹமசர் என்றோ பெயர் வைப்பீர்களா? அதை உங்களால் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியதோடு, மேற்குவங்க அரசு வழக்கறிஞரைப் பார்த்து, உங்கள் வீட்டில் செல்ல பிராணிகளின் பெயர்கள் என்ன என கேட்டார். அதற்கு அவர், டாஃபி, டஃபில், தியோ என பதிலளித்தார். எந்த சர்ச்சையும் ஏற்படாத வகையில் வீட்டு விலங்குகளுக்கு பெயர் வைத்துள்ள நீங்களே சிங்கங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதிகாரிகளிடம் கேளுங்கள் என நீதிபதி தெரிவித்தார். மேலும் தயவு செய்து எந்த விலங்குகளுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ தீர்க்கதரிசிகள், சுதந்திர போராளிகள் பெயர்களை  வைக்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.