மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நேற்று தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியில் நடந்த பாஜக பொது கூட்டத்தில் பாஜக தொண்டர்களிடையே கடும் சண்டை நடைபெற்றது.
வார்த்தை மோதலில் ஆரம்பித்த இந்த விவகாரம் பின்னர் கைகலப்பாக மாறியது. எதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH Rajasthan: Two groups of Bharatiya Janata Party (BJP) workers clash during a rally in Masuda, Ajmer. (11/4/19) pic.twitter.com/AMrJXTKlbg
— ANI (@ANI) April 12, 2019