
மக்கள் தொகை குறைவாக கொண்ட கிராமங்களுக்கு மதுபானக் கடைகளுக்கு தடை விதிப்பதாக ஹரியானா மாநில அரடு முடிவு செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி சண்டிகரில் நயாப் சிங் சைனி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய கலாக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த கொள்கையின் அடிப்படையில், 500க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் மதுபானக் கடைகள் மூடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால், 700க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 152 மதுபானக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய கலால் கொள்கையின்படி, தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் எந்த மதுபானக் கடைகள் நேரடியாகத் தெரியாது. இந்த சாலைகளில் மதுபானக் கடை தொடர்பான அடையாளப் பலகைகள் அல்லது விளம்பரங்கள் நேரடியாக தெரியுமானால், அது விதிமீறலால் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. முதல் மீறலுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், இரண்டாவது மீறலுக்கு ரூ.2 லட்சம் அபராதமும், மூன்றாவது மீறலுக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து விதியை மீறுபவர்களுக்கு கடையின் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்றும் முடிவு செய்துள்ளது.