Skip to main content

இந்தியாவில் முதல் விற்பனையகத்தைத் தொடங்கும் ஆப்பிள் நிறுவனம்!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் 'ஆப்பிள் நிறுவனம் '  லேப்டாப் , டேப்லெட் , ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவை  தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக தனது பொருட்களை விற்பனை செய்ய , மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முதல் விற்பனையகத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவன பொருட்களை  பயன்படுத்துவோர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.மேலும் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விற்பனை குறைவாக இருப்பதாகவும், டீலர்கள் இருந்தும் விற்பனையில் மந்தம் என தெரிவித்துள்ளது.

 

APPLE STORES

 

 

ஆப்பிள் நிறுவன பொருட்களின் விற்பனையில் அமெரிக்காவில் 47% , சீனாவில் 18% ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற பொருட்கள் விற்பனை ஆகி வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவு. எனவே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையகம் தொடங்கி அதனை விரிவுப்படுத்தும் போது ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்