amrutha

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த பிரனய்- அம்ருதா என்ற இருவர் கலப்புத் திருமணம் செய்துகொண்டதால், அம்ருதாவின் தந்தை கூலிப்படையை ஏவி பிரனயை ஆணவக்கொலை செய்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. பிரனயை கொலை செய்ய அம்ருதாவின் தந்தை பிஹாரை சேர்ந்த கூலிபடைக்கு 2 கோடி வரை கொடுத்து கொலை செய்ய சொல்லியிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த கொலையில் சம்மந்தப்பட்டதாக அம்ருதாவின் தந்தை உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் அம்ருதாவின் தந்தை பிரனயை கொல்ல காரணமாக இருந்தது ஒரு வீடியோதான் என்று தெரிவித்துள்ளாராம்.

Advertisment

பிரனய்-அம்ருதா திருமணம் செய்துகொண்டபோது, அதை திரைப்படம் அளவிற்கு வீடியோவாக எடுத்துள்ளனர். இதை அம்ருதா, சமூக வலைதளத்தில் பதிவிட, அது சரசரவென வைரலாகி அம்ருதாவின் தந்தைக்கு நெறுங்கியவர்களின் மூலம் அம்ருதாவின் தந்தை காதுக்கு வந்துள்ளது. அவர்கள் மேலும், அதை அவரிடம் சொல்லி சொல்லி இவர்கள் இருவரின் மீது வெறுப்படைய செய்துள்ளனர். அப்போதுதான், அம்ருதாவின் தந்தை, ”பிரனயை கொலை செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாலும் இப்படித்தானே பரவும்” என்று கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.