Skip to main content

“கீதை, பைபிள், குரானை விட அரசியலமைப்பு குறைந்தது இல்லை” - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Adhir Ranjan Chowdhury S Speech in Parliament on Constitution

 

‘நமது அரசியலமைப்பு கீதை, குரான், பைபிள் போன்றவற்றுக்குக் குறைந்தது இல்லை’ என மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது. 

 

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. இது இன்று நடைபெறும் சிறப்புக் கூட்டத் தொடரில் அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் ஜனாதிபதி விருந்தில் இந்தியாவிற்குப் பதில் 'பாரத்' என இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பல எதிர்ப்புக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் எழுந்தன. ஒருகட்டத்தில் நாட்டின் பெயர் மாற்றப்படும் எனவும் பரவத் தொடங்கியது. ஆனால், ஒன்றிய அமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். 

 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் விவாதத்தின் போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நமது அரசியலமைப்பு கீதை, குரான், பைபிள் போன்றவற்றுக்குக் குறைவானதில்லை. மேலும், ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இதன் பொருள். எனவே, தேவையில்லாமல் இரண்டுக்கும் விரிசலை ஏற்படுத்த யாரும் முயற்சிக்காமல் இருந்தால் நல்லது” எனப் பேசியுள்ளார். 

 

மேலும், அவர் “பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு, பிரதமர் ராஜீவ்காந்தியால் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல், மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. எனவே, இது மக்களவையில் சிலமுறை நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மாநிலங்களவையில் இந்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த மசோதா இன்னும் செயலில் தான் உள்ளது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சரணடைந்த கொலையாளிகள் மீது நம்பிக்கை இல்லை; பின் புலத்தை ஆராய வேண்டும்”- செல்வப்பெருந்தகை

Published on 06/07/2024 | Edited on 07/07/2024
selvaperunthagai condemns Armstrong  incident

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே, பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ஆம்ஸ்ட்ராங் தனிமையில் இருக்கும் பொழுது கோழைகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளார்கள். காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ராகுல் காந்தி சோனியா காந்தி காலை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி இடமும் பேசியுள்ளார்கள். உண்மையான குற்றவாளிகளை ஆராய வேண்டும்; கண்டுபிடிக்க வேண்டும். இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் சரி, ஏற்கெனவே சரண் அடைந்துள்ள கொலையாளிகள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. பின் புலம் என்னவென்று ஆராய வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய அரசியல் பின்புலம் இருந்தாலும் சரி சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் பேரியக்கத்தின் கோரிக்கை.

அவரின் உடலை அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். பௌத்தராக தன்னை அர்ப்பணித்துள்ளார் என்ன பூஜை செய்ய வேண்டுமோ அதற்கு அனுமதிக்க வேண்டும், பிறகு அவரின் குடும்பத்தினர், கட்சி உறுப்பினர்கள் கேட்கும் இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தை எப்படி அவரின் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்தார்களோ அதே போல் ஆம்ஸ்ட்ராங்கையும் அவர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இது அந்தக் கட்சியினரின் கோரிக்கையும் கூட காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையும் கூட” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ஹத்ராஸ் சம்பவம்; நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ராகுல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Hadhras Incident; Rahul went to offer condolences in person

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 02.07.2024 அன்று ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசம் அலிகர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

nn

மொத்தம் 26 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்கட்டமாக அலிகர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்தித்து அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதியை அவர் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் 'தேவையான நீதியும் பெற்றுத் தரப்படும். அதற்கும் தான் உறுதியுடன் இருப்பேன்' என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட உறவினர்களின் குடும்பத்தாருக்கு ராகுல்காந்தி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.