Skip to main content

இது காதலா? 13 வயது சிறுவன், 23 வயது இளம்பெண்: போலீசுக்கு பயந்து தலைமறைவான பெண்!

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
child 600.jpg

 

 


சிறுவனை காதல் திருமணம் செய்த இளம்பெண், போலீசுக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார். 
 

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் உப்பர ஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் சிறுவனின் உறவினர் 23 வயதுள்ள அய்யம்மாள் என்பவருக்கும் உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்தது.
 


 கடந்த மாதம் 27ந் தேதி அதிகாலை 3 மணிக்கு இருவீட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது. 
 

இருவரும் உறவினர் என்பதால் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்றுவரும்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. வயது வித்தியாசம் இருப்பதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் இவர்களுடைய காதல் தொடர்ந்தது. பெண்ணுக்கு திருமண வயது என்பதால் அதற்கேற்றால் போல் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுவனைத்தான் திருமணம் செய்வேன் என்று உறவினர்களை பல்வேறு வழிகளில் மிரட்டியுள்ளார் இளம்பெண். வேறு வழியில்லாமல் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்தனர். 
 

திருமண வயதை எட்டாத சிறுவன் என்பதால் ரகசியமாக நடந்தது இந்த திருமணம். ஒரு வாரம் கழித்து இந்த சம்பவம் அரசல் புரசலாக வெளியே தெரிந்ததும், சமூக வளைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

 


 13 வயது சிறுவன் ‘மைனர்’ என்பதும் தெரிந்தும், அவனை 23 வயது இளம் பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 


 இதுபற்றி அறிந்ததும் இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகி விட்டனர். இருப்பினும் மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்