தேனி மாவட்டம் போடியில் குரங்கணி மலைப்பகுதி அருகே கொழுக்கு மலையில் ஈரோடு , கோவையைச்சேர்ந்த 40 கல்லூரி மாணவ, மாணவிகள் அனுமதி பெறாமல் மலையேறும் பயிற்சிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தவிக்கின்றனர்.
மீட்புபணியில் தேனி மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட மீட்புபணியில் 7 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், மாணவர்களை மீட்க உதவுமாறு விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணியில் ஈடுபடும் விமானப்படையினர் தேனி மாவட்ட ஆட்சியருடன் தொடர்பில் இருப்பார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.