உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உத்தரபிரதேச மகளிர் ஆணையத்தின் தலைவர் பபிதா தலைமையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பிற்காக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், ஜிம்களில் பெண் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஒரு பெண் ஒரு ஆண் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற விரும்பினால், அவர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. பெண்கள் அணியும் உடை அளவீடுகளை எடுக்க ஒரு பெண் தையல்காரர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெண்களை ஏற்றிச் செல்லும் பள்ளிப் பேருந்துகளில் ஒரு பெண் ஊழியர் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
பயிற்சி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரைகளை அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டம் இயற்றுமாறு மாநில அரசிடம், மகளிர் ஆணையம் கோரிக்கை விருக்கும் என்று மகளிர் அமைப்பின் உறுப்பினர் ஹிமானி அகர்வால் தெரிவித்துள்ளார்.