திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் உடலுக்கு மலர்வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.