கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (9 ஆம் தேதி) விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீஸ் கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாத்திமாவின் தாய், சகோதரி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் விடுமுறைக்காக கேரளா சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடமும் விசாரணை நடத்த திட்டம். முக்கிய ஆதாரமான பாத்திமா செல்போனின் ஆய்வக முடிவுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் காத்திருக்கிறது.
நேற்றைய தினம் ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமசந்திரன் உள்ளிட்ட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பிய மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.