Published on 21/11/2018 | Edited on 21/11/2018

எழும்பூர் ரயில்நிலையத்தில் கடந்த வாரம் 2000 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இறைச்சி நாய் இறைச்சி என்ற சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து விசாரித்து வந்த அதிகாரிகள், பார்சல் விவரத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், ஜோத்பூரில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த பார்சலில் உள்ளே இருப்பது மீன் என குறிப்பிடப்பட்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடாக பார்சல் அனுப்பியதற்கு உடந்தை எனக்கூறி சென்னையைச் சேர்ந்த முகவர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஜோத்பூருக்கு பயணப்பட உள்ளது. இதனால் சர்ச்சை வலுத்திருக்கிறது. முழுமையான அறிக்கை வெளியாக இன்னும் சிலநாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.