
தமன்னா சமீபகாலமாகத் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக் ஆகும். பின்பு இந்தியில் இவர் நடிப்பில் 'போலே சூடியன்' மற்றும் மலையாளத்தில் 'பாந்த்ரா' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தமன்னா மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவல் வெறும் வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் தமன்னா. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஆண் போல் உடையணிந்து தனது திருமண தகவலைக் கிண்டலடிக்கும் வகையில் தன்னைத் தானே, "என் தொழிலதிபர் கணவரை அறிமுகப்படுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டு அது வெறும் வதந்திதான் என சுட்டிக்காட்டியுள்ளார்.