
'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வரும் 15 அல்லது 22 ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார்.இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது கதாநாயகி குறித்த தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.