Skip to main content

மலையாளத்தில் என்ட்ரி; முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

Tamannaah entry in malayalam industry

 

தமன்னா சமீபகாலமாக தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்திவருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் 'குர்துண்ட சீதாகாலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் 'போலா ஷங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக் ஆகும். பின்பு இந்தியில் 'பப்லி பவுன்சர்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் தமன்னா தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளை தொடர்ந்து தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி அருண் கோபி இயக்கத்தில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.     

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.