Skip to main content

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த 'கே.ஜி.எஃப்' பட பிரபலம்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

anbariv

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'காடன்', 'ஜகஜால கில்லாடி', 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்களின் பணிகள் நிறைவுற்று ரிலீசிற்குத் தயாராகவுள்ளன. இப்படங்களைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படம் 'மோகன்தாஸ்'. இப்படத்தை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்க, நடிகர் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

 

ad

 

சமீபத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட 'மோகன்தாஸ்' படக்குழு, படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், படத்தின் சண்டைக்காட்சி இயக்குநர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மோகன்தாஸ் படத்திற்கான சண்டைக்காட்சி இயக்குநராக அன்பறிவு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இரட்டையர்களான இவர்கள், 'மெட்ராஸ்', 'கபாலி', 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' உள்ளிட்ட பட வெற்றிப்படங்களில் சண்டைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ளனர். இவர்கள், கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்திற்காக சிறந்த சண்டைக்காட்சி இயக்குநருக்கான தேசிய விருதினை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்