
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த கார்த்தி மற்றும் ரஜிஷா விஜயனோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். மித்ரன் இயக்கி வரும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ர் லுக் மற்றும் முன்னோட்ட வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு பேசுகையில், “சர்தார் 2 ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். தயாரிப்பாளரிடம் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து இந்த படத்தை நேரடியாக வெளியிடுங்கள். பான் இந்தியா ஹிட்டாக இந்த படம் இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
3 அற்புதமான மனிதர்கள், கார்த்தி, அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள். கார்த்தியிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். அந்த மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும், அதை பொறுத்துக் கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது பெரிய வெற்றி தரும்” என்றார்.