Skip to main content

சத்குருவை சந்தித்த சமந்தா!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

samantha

 

தமிழில் ஹீரோயினாக அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, பின் தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட் வந்தவர் சமந்தா. தற்போது இரண்டு மொழி திரைத்துறையிலும் முன்னணி நடிகையாக பிஸியாக இருக்கிறார்.

 

விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். ‘தி ஃபேமிலி மேன் 2’ என்னும் பிரபல வெப் சிரீஸில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

 

அண்மையில் சத்குருவைச் சந்தித்த நடிகை சமந்தா, அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த சந்திப்பு குறித்து அதில், “ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வதுதான். இது ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு.

 

அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்” என்று பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple


வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்  நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

 

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Next Story

கோஷ்ட் Vs பிரின்ஸஸ்... பாலிவுட்டில் மிரட்ட இருக்கும் சமந்தா

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

Samantha debuting Bollywood movie

 

யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும் சமந்தா, தற்போது இந்தி திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். 

 

அதன்படி பாலிவுட் இயக்குநர் அமர் கௌசிக் இயக்கும் புதிய படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். அதில் ஒன்று இளவரசி கதாபாத்திரம் என்றும், மற்றொன்று பேய் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள சமந்தா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

இதற்கு முன்பு பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இத்தொடர் வெளியாகி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.