Skip to main content

ஆலியா பட் படத்தின் ட்ரைலருக்கு கடும் எதிர்ப்பு...!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
pooja bhatt

 

மகேஷ் பாட் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு உருவான படம் 'சடக்'. இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

 

இந்த படத்தை மகேஷ் பாட் இயக்க, அவருடைய இரு மகள்களான பூஜா பாட் மற்றும் ஆலியா பாட் இருவரும் நடித்திருக்கின்றனர். மேலும் ஆதித்யராய் கபூர் உள்ளிட்ட பல்வேறு வாரிசு நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

 

பாலிவுட் நெபோடிஸம்தான் சுசாந்த் மரணத்திற்கு காரணம் என ஜூன் மாதத்திலிருந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதனால் வாரிசு நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் இப்படமும் முதன்மை வகித்தது.

 

இந்நிலையில் இப்படம் வருகிற 28ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தை எதிர்க்கும் விதமாக ட்ரைலருக்கு பலரும் டிஸ்லைக் கொடுத்து வருகின்றனர். 50 ஆயிரத்திற்கும் மேல் லைக்குகள் பெற்றிருந்தாலும், டிஸ்லைக்குகள் 5 லட்சத்திற்கும் மேல் தாண்டியுள்ளது. பலரும் இந்த ட்ரைலர் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர். 

 

இதுபோல தீபிகா சிஏஏவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் சபாக் ட்ரைலரை ஒரு குறிப்பிட்ட அமைப்பு சார்ந்தவர்கள் டிஸ்லைக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்