Skip to main content

“அமேசிங் ட்ரைலர்” நண்பா; ஆவலின் உச்சத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின்

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Indian cricketer Ashwin tweet about fir movie trailer

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியத்தில் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில் இப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில்  'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் ட்ரைலரை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "அமேசிங் ட்ரைலர்”, இப்படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் நண்பா. உனது கதை தேர்வு எப்போதும் போல என்னை ஆச்சரியப்பட வைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

கிரிக்கெட் வீரர் பின்னணி குரலில் வெளியான ஜி.வி பிரகாஷ் பட ட்ரைலர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்பு கள்வன் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு வைரமுத்து, வசந்தபாலன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.  

இப்படி தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் டியர் படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிரித்விராஜ் என மூன்று பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷே இசையமைத்துள்ளார். 

ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பிண்ணி குரல் கொடுத்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக அளவு குறட்டை விடும் நபராக இருக்கிறார். அதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி காமெடி கலந்த ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது போல் அமைந்துள்ளது. இப்படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரைலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதே குறட்டை பிரச்சனையை மையப்படுத்தி மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.