Skip to main content

திருமணத்துக்கு ரெடியான கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

gautham karthik manjima mohan marriage date

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கவுதம் கார்த்திக். மணிரத்னத்தின் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இப்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்திலும் நடிக்கிறார். 

 

இதனிடையே கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக பேசப்பட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். இருவரும் இணைந்து 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 28 ஆம் தேதி (28.11.2022) சென்னை அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு திருமண வரவேற்பை நடத்தி திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்