Published on 01/12/2021 | Edited on 01/12/2021
![FIR movie update out now](http://image.nakkheeran.in/cdn/farfuture/-C8oQRaEs5vhB_4mAJZF0BmTgSRrt45hHzUA2ql9rKw/1638356952/sites/default/files/inline-images/v_4.jpg)
நடிகர் விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, 'ஜீவா', 'ராட்சசன்', 'இன்று நேற்று நாளை' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/OSsnC5wBXRy9VIHAxak87xgND5k0brLA8VYroeIElsE/1638356261/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_16.jpg)
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தது ,"‘எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அப்டேட் நாளை" என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
TOMORROW. #FIR pic.twitter.com/jyHHyJ39zX
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) December 1, 2021