Skip to main content

”ஓடிடி வாய்ப்புகள் வந்தும்கூட...” - அருண் விஜய்யின் காத்திருப்பை பாராட்டிய இயக்குநர்

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

GNR Kumaravelan

 

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் ட்ராமா படம் ’சினம்’. இப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

நிகழ்வில் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் பேசுகையில், “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலம். கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தது விஜயகுமார் சார்தான். சில ஓடிடி வாய்ப்புகள்கூட வந்தன. ஆனால், படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.