Skip to main content

'தள்ளிப்போகாதே' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியானது!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

Thalli Pogathey

 

இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான படம் 'பூமராங்'. அப்படத்தைத் தொடர்ந்து, சந்தானம் நடிப்பில் 'பிஸ்கோத்', அதர்வா நடிப்பில் 'தள்ளிப் போகாதே' என இரு படங்களை அவர் இயக்கி வந்தார்.

 

சந்தானம் நடிப்பில் தயாரான 'பிஸ்கோத்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், 'தள்ளிப் போகாதே' படத்தின் ரீலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படமானது வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது..

 

'தள்ளிப் போகாதே' படமானது, 2017-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்