Skip to main content

ஏகே 62 - விக்னேஷ் சிவன் அவுட்; நியூ என்ட்ரி கொடுத்த பிரபல இயக்குநர்? 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

ak 62 will de directed by Magizh Thirumeni vignesh shivan project postponed reports

 

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் பொங்கலன்று வெளியான துணிவு படம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூல் குறித்த விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.220 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 'ஏகே 62' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் அரவிந்த்சாமியும் சந்தானமும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' படம் தள்ளிப் போவதாகவும் அதாவது அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 63'-ஐ விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருக்கும் எனவும் சமூக வலைத்தளத்தில் சொல்லப்படுகிறது. மேலும் 'ஏகே 62' படத்தை 'தடம்', 'கலகத் தலைவன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் திடீரென தள்ளிப்போகவுள்ளதாகச் சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தக் குழப்பங்களுக்கு அஜித் தரப்பு அல்லது படக்குழு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குட், பேட், அக்லி’ - அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
ajith 63 announcement

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு, அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். இப்போது விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புற்காக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. படத்திற்கு குட், பேட், அக்லி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் பொங்கல் 2025ல் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

“அஜித் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்” - எடப்பாடி பழனிசாமி

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Edappadi K Palaniswami about ajithkumar hospitalised

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்னும் சில தினங்களில் வீடு திரும்பவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து தற்போது 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.

இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.