![australia vs india 2nd test match](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ar3Io_vJVBoXTPKHPRb_tdC3qlMFJIxZAc6a-gHVah8/1609054972/sites/default/files/inline-images/c345_1.jpg)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 195 ரன்களை எடுத்தது.
![australia vs india 2nd test match](http://image.nakkheeran.in/cdn/farfuture/IumSS2TlBkrrS4jNiFKFikDttfpmIBYvHIF9IG4f1Os/1609054991/sites/default/files/inline-images/c234666.jpg)
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாளாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை சேர்த்தது. இதில் இந்திய அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே 195 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் தனது 12 ஆவது சதத்தைப் பூர்த்திச் செய்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 104, ஷுப்மன் கில் 45, ஜடேஜா 40 ரன்கள் சேர்த்தனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 82 ரன்கள் முன்னிலையில் உள்ளது.