Published on 27/11/2020 | Edited on 27/11/2020

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதலில் பந்து வீசுகிறது இந்திய அணி.
சிட்னியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெறவில்லை; நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா விளையாடாத நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.