Published on 27/04/2019 | Edited on 27/04/2019
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இவர் 242.7 புள்ளிகள் பெற்று தாகம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிசுடுதல் அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் அபிஷேக் வர்மா. இவர் பங்கேற்ற இரண்டாவது உலகக்கோப்பை தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.