டிவைன் மெடிஸியஸ் சார்பில், ‘ஆல் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் ஜமைக்கா’வில் மருத்துவம் படிப்பதற்கான விளக்கக்கூட்டம் நடைபெற்றது. சென்னை விஜயா பார்க்கில் நடந்த இந்தக் கூட்டத்தில், மருத்துவர் ராம் கே. சலாஸ்னி சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டார். இதில், கல்வி ஆலோசகர் சுபாஷ் சந்திர போஸ் கலந்துகொண்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சி முடிந்த நம்மிடம் பேசிய கல்வியாளர் சுபாஷ் சந்திர போஸ், “ஏறத்தாழ 15 வருடங்களாக வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு வசதிகள் செய்துவருகிறோம். உலகத் தரம் வாயந்த அமெரிக்க பாடத்திட்டத்துடன், அலோபதி விவரங்களுடனான மருத்துவப் படிப்பை இந்தக் கல்லூரியில் வழங்கிவருகின்றனர். ஐந்து வருட படிப்பு முடிந்தவுடன் அந்த நாட்டில் மாதம் மூன்று லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது. அமெரிக்காவில் மேல்படிப்புக்கும், அந்த நாட்டின் அனுமதியுடன் அங்கு பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பு இங்கு உள்ளது.
பொருள் ஈட்டுவதுமட்டுமின்றி நம் மாணவர்களின் நல்ல படிப்புக்காகவும் இந்தச் சேவை செய்துகொண்டிருக்கிறோம். கனடாவில் மருத்துவம் பயிற்சி பெற்றுவரும் மருத்துவர் இங்கு வந்திருந்தார். அதன் காரணமாக மாணவர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினோம்.
இன்று நீட் தேர்வு எழுதி வாய்ப்பு கிடைக்காதவர்கள் பங்கேற்றனர். அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையை நடத்திவருகிறோம். மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். மதிப்பெண் பெற்று பண வசதி இருந்தால் இந்தியாவில் படிக்கிறார்கள். அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தாலும், அவர்கள் வெளிநாடுகளில் எதிர்க்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் வேறு சில விஷயங்களைக் கண்டு தயங்குகிறார்கள். அதற்கெல்லாம் சிறப்பான வழிமுறைகளை உருவாக்கி அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறந்த மருத்துவர்களாக வரவேற்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கே என்னிடம் மாணவர்களாக படித்த மூன்று மருத்துவர்கள், அவர்களின் உடன் பிறந்தவர்களுக்கான சேர்க்கைக்காக வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.